ஹட்டனில் கடும் மழை: நீரில் மூழ்கிய வீதிகள்!!

நாட்டில் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் மழை மற்றும் மண்சரிவு காரணமாக வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஹட்டன் பிரதேசத்தில் நேற்று (22.05.2023) மாலை பெய்த கடும் மழையினால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் வீதி சுமார் ஆறு அங்குலம் வரை நீரில் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
கடும் மழை
சுமார் ஒரு மணித்தியாலம் வரை பெய்த கடும் மழை காரணமாக நீர் வழிந்தோடும் கால்வாய்கள் பெருக்கெடுத்தன.
இதன் காரணமாக ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் பல இடங்களில் வீதி வெள்ளக்காடாய் காட்சியளித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கால்வாய்கள் பெருக்கெடுத்ததன் காரணமாக வீதியில் நடந்து செல்லும் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மண்சரிவு அபாயம்
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே குறித்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.