முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் வெண் ஈ தாக்கம் சடுதியாக அதிகரிப்பு

தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெண் ஈத் தாக்கம் பல பகுதிகளிலும் மிகவும் சடுதியாக அதிகரித்துக் காணப்பட்டுள்ளதன் காரணமக தேங்காயின் உற்பத்தியும் குறைவடைந்து காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அதற்கமைவாக இன்று(26) கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான தென்னை அபிவிருத்திச் சபையில் முகாமையாளர் வைகுந்தன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் வெண் ஈ  பாதிப்புக்கள் ஏற்பட்ட பகுதிகளை நேரில் சென்று வெண் ஈத் தாக்கம் மிக சடுதியாக அதிகரித்து காணப்பட்டுள்ளது.

அத்துடன் நாளாந்தம் பயன்படுத்தும் தண்ணீர் முதல் கொண்டு வீட்டில் பயன் தரக்கூடிய வகையில் இருந்த அனைத்து செடி கொடிகளிலும் வெண்  ஈ தாக்கம் மிக சடுதியாக   அதிகரித்து காணப்படுவதை அவதானிக்கமுடிந்தது.

அத்துடன் ஊடகங்களுக்கு இப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெண் ஈத் தொடர்பாக மக்கள் கருத்துக்கள் வழங்கினர். தென்னையின் பல பகுதிகளில் இக்காலப் பகுதியில் கடும் வரட்சி காணப்படுவதன் காரணமாக வெண் ஈ தாக்கத்தின் காரணமாகவும் தென்னைகளில் தேங்காயின் விலை தொடர் மிகவும் சடுதியாக  அதிகரித்து காணப்படுவதாகவும் இதன் காரணமாக தென்னை செய்கையாளர்கள் மிகுந்த அவதாரத்துடனும் தென்னைக்கு  அதிகளவான நீரினை பாய்ச்சுவதன் மூலமாகவும் தென்னை மரங்களை முடிந்தவர்கள் தண்ணீரில் கழுவிடுவது  ஓரளவினாவது தென்னைக்கு ஏற்படும் பாதிப்பினை குறைக்க முடியும் என தெரிவித்தனர்.

அத்துடன் கடுமையான மழை கிடைக்குமாயின் வெண் ஈ தாக்கம் முற்றும் முழுதாக அழிந்துவிடும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: