இலங்கைகிழக்கு மாகாணம்பிரபலமானவைமுக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, திருகோணமலையில் வொய்ஸ் ஒப் மீடியாவின் ஊடகப் பயிற்சி

கிழக்கு மாகாணத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக ஊடகப் பயிற்சிகளை வழங்கிவரும் வொய்ஸ் ஒப் மீடியா நெட்வேர்க் ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான நிலையத்தின் ஊடகக் கற்கைகள் நிறுவகம் இந்த ஆண்டுக்கான ஊடகக் கற்கைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலையில் இந்தப் பயிற்சிகள் நேரடியாக நடைபெறவுள்ளன. ஆன்லைன் மூலமாகவும் பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

2024 இன் 8 ஆவது அணி மாணவர்களுக்கான 3 மாதகால சான்றிதழ் மற்றும்;, 6 மாதகால டிப்ளோமாவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

றேடியோ மற்றும் மேடைநிகழ்ச்சிக்கான அறிவிப்பு, தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தி வாசிப்பு, பத்திரிகையாளருக்கான பயிற்சிகள், செய்தி சேகரிப்பு, இணையத்தில் செய்திகளைப் பதிவேற்றல் மற்றும் ஊடக நெறிமுறைகள், தொலைபேசி மூலம் கதை சொல்லல், கதைகளைப் படம்பிடித்தல், ஆவணப்படத் தயாரிப்பு, நடிப்பு மற்றும் திரைப்பட தயாரிப்பு போன்ற துறைகளை உள்ளடக்கிய வொகுஜன ஊடகவியல் (மாஸ் மீடியா) டிப்ளோமா கற்கை நெறிகள் ஆரம்பமாகவுள்ளன.

க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள், ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இப்பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.

சாதாரணதரம் மற்றும் உயர்தரத்தில் ஊடகக் கற்கைநெறியை தெரிவு செய்தவர்கள்;, அறிவிப்பு, வாசிப்பு, கட்டுரை எழுதுதல், பேச்சு, குறுந்திரைப்படம் எடுத்தல், புகைப்படக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் இக்கற்கை நெறிக்கான தகைமையாக கொள்ளப்படுவர்.

அனுபவமும், ஆற்றலுமிக்க கல்விசார் விரிவுரையாளர்கள் மூலமாக செயற்றிட்ட பயிற்சிகள், 80 வீதமான செய்முறை பயிற்சி உபகரணங்கள் ஊடாக திருப்தியான வழிகாட்டல் பயிற்சிகள், பயிற்சி முடிவில் கொடுப்பனவுடன் பல்வேறு தளங்களில் உள்ளகப் பயிற்சிகள், நவீன தொழில் நுட்ப உபகரணங்களை கையாளும் திறமையுடனான பயிற்சி வசதிகள், குறைந்த பயிற்சிக்கட்டணத்தில் வார, வார இறுதிநாள் வகுப்புக்கள், அரசாங்க அங்கிகாரமிக்க சான்றிதழுடன் இந்திய ஊடக நிறுவனங்களின் பங்களிப்பும் சான்றிதழ் தகைமையும் பயிற்சியும் இந்த பாடநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

👉இந்த பாடநெறி தொடர்பான தகவல்களுக்கு அழைக்க: 0652050790 வாட்ஸ் அப் 0756329293 / 0777773164
👉விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இந்த லிங்கை தொடரவும்: https://forms.gle/cy6VStsF1rpeTVYz7
👉எமது முகப்புத்தகத்தை பார்வையிட:
https://www.facebook.com/imsbatticaloa

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: