இலங்கைபிரபலமானவைபிரித்தானியா

உயிர்பிரியும் நிலையில் காப்பாற்றப்பட்ட பிரித்தானிய தம்பதி!!

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய தம்பதி தவறுதலாக கடலில் வீழ்ந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஹிக்கடுவை கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

ஹிக்கடுவை கடற்பரப்பில் படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது கடலில் விழுந்த வெளிநாட்டு சுற்றுலா தம்பதி மற்றும் அவர்களது இரண்டரை வயது குழந்தை ஆபத்தில் சிக்கியிருந்தனர்.

இனை அவதானித்த காவல்துறை உயிர் காப்பாளர்கள் அவர்களை காப்பாற்றியதாக ஹிக்கடுவ சுற்றுலா காவல்துறையினர் தெரிவித்தனர். 400 மீட்டர் தூரம் நீந்தி ஆபத்தில் இருந்த பிரித்தானிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: