இலங்கைகொழும்புமுக்கிய செய்திகள்

கொழும்பில் பாதுகாப்பு திடீர் என பலப்படுத்தப்பட்டதற்கும் கொழும்பு பல்கலைகழக சிற்றுண்டிச்சாலைக்கும் என்ன தொடர்பு?

கொழும்பு பல்கலைகழக சிற்றுண்டிச்சாலையில்  வழமைக்கு மாறாக அதிகளவு மதிய உணவிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதை தொடர்ந்தே கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில தினங்களாக மாணவர்கள் மீண்டும் எழுச்சிக்கு தயாராகின்றனர் என்ற தகவலை தொடர்ந்து அச்சமடைந்த மேல்மாகாண பொலிஸ் அதிகாரிகள் விசேடபடைப்பிரிவினர் கலகதடுப்புபிரிவினர் உட்பட பல்வேறு பிரிவினரை களமிறக்கியிருந்தனர்.

வெள்ளிக்கிழமை கொழும்புபல்கலைகழகத்தின் உணவுவிடுதியில் 1500 மதியஉணவிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனை அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு எழுச்சிக்கான ஏற்பாடு என பாதுகாப்பு தரப்பினர் தவறாக புரிந்துகொண்டுவிட்டனர் எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கலைப்பீடத்தின் நிகழ்வொன்றிற்காக புதிய மாணவர்கள் 500 பேர் அழைக்கப்பட்டிருந்தனர் அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வருவார்கள்  என எதிர்பார்க்கப்பட்டதால் 1500 உணவுப்பொதிகள் அவசியம் என உணவுவிடுதியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது- ( பாண் சம்பல் ஒரு கறி)

ஜனாதிபதியின் ஐந்தாம் ஒழுங்கை வீட்டிற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது – கடந்த வருடம் அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்ட போதிலும் அவர்அங்கு வசிப்பதில்லை ஆனால் அவரது வீட்டிற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

கொழும்பு நகரத்திற்கு வெளியே உள்ள பொலிஸ்நிலையங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்- தாங்கள் எதற்காக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது தெரியாத நிலையிலேயே அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்;டனர்.

இதேவேளை அரசாங்கம் மாறப்போகின்றது என்ற ஊகங்களையும் இவர்களே சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸார் தங்களின் வதந்திகளிற்கு தாங்களே பலியாகியுள்ளனர் என தெரிவித்துள்ள சிரேஸ்ட அதிகாரியொருவர் கலகமொன்று இடம்பெறப்போகின்றது என்ற அச்சம் காரணமாக மேலும் பல பொலிஸார் கொழும்பு பல்கலைகழக பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேகாலப்பகுதியில் பல்கலைழக மாணவர்கள் வளாகத்திற்குள் கலைவார கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் 1980களின் பிரபல பாடல்களை பாடி ஆடினர்.

போலியான தகவல்கள் காரணமாக அவமானத்தை எதிர்கொண்டுள்ள அதிகாரிகள் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளாமல் இது எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்த ஒத்திகை என தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பல்கலைகழகத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக அதிகாரிகள் கொழும்பில் மோட்டார் சைக்கிள்கள் வாகனங்கள் போன்றவற்றை சோதனையிடும் நடவடிக்கைகளை அதிகரித்தனர்- புறநகர் பகுதிகளிலும் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை அதிகரித்தனர்.

பரந்துபட்ட பாதுகாப்பு நடவடிக்கை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே இவ்வாறான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

எனினும் பல வெளிநாட்டு தூதரகங்கள் கொழும்பில் பதற்றநிலை காணப்படுவது குறித்தும் மக்கள் எழுச்சி குறித்து பாதுகாப்பு தரப்பினர் மத்தியில் காணப்படும் அச்சம் குறித்தும் தங்கள் தலைநகரங்களிற்கு தகவல் அனுப்பிவிட்டதால் பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகள் எதிர்மாறாத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: