கிரிக்கெட்விளையாட்டுச்செய்திகள்

2036 பேர்லின் ஒலிம்பிக் குறித்து கற்பனை செய்யலாம்: ஜேர்மன் விளையாட்டுத்துறை அமைச்சர்

2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்­டி­களை ஜேர்­ம­னியின் பேர்லின் நடத்­து­வது குறித்து கற்­பனை செய்ய முடியும் என அந்­நாட்டின் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நான்சி ஃபேசர் தெரி­வித்­துள்ளார். ‘1936 பேர்லின்’ ஒலிம்பிக் போட்­டிகள் நடை­பெற்று 100 வரு­டங்கள் பூர்த்­தி­யாகும் வேளையில் மீண்டும் அங்கு கோடைக்­கால ஒலிம்பிக் போட்­டி­களை நடத்­து­வது குறித்து ஆரா­யப்­ப­டு­கி­றது.

1936 ஆம் ஆண்டின் கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா பேர்லின் நகரில் நடை­பெற்­றது.

அவ்­வ­ருட குளிர்­கால ஒலிம்பிக் விழாவும் ஜேர்­ம­னியின்; ஜேர்மிஷ் பார்­டேன்­கேர்சென் நகரில் நடை­பெற்­றன. சர்­வா­தி­காரி அடோல்வ் ஹிட்லர் தலை­மை­யி­லான ஆட்­சிக்­கா­லத்தில் அப்­போட்­டிகள் நடை­பெற்­றன.

இந்­நி­லையில் அமைச்சர் நான்சி ஃபேசர் அளித்த செவ்­வி­யொன்றில், ‘1936ஆம் ஆண்­ டின் போட்­டிகள் பயங்­க­ர­மா­னவை. அப்­போட்­டி­களை தமது ஆட்­சிக்­கான பிரச்­சா­ரங்­க­ளுக்­காக நாஸிகள் ஏற்­பாடு செய்­தனர். 

அப்­போட்­டிகள் நடை­பெற்ற இடத்­தி­லேயே விசேட வழியில் மீண்டும் ‍போட்டிக‍ளை நடத்­து­வது குறித்து கற்­பனை செய்ய முடியும். 1936 ஆம் ஆண்டின் போட்­டி­களின் தன்மையை எடுத்­துக்­காட்­டு­வ­தற்கும் உலகில் மனித உரி­மை­களை ஊக்­கு­விப்­ப­தற்கும் ஜேர்­மனி அதிக வேலை­களை செய்ய வேண்­டி­யி­ருக்­கும’; என்றார்.

இப்­போட்­டி­களை நடத்­து­வ­தற்கு விண்­ணப்­பிப்­பதை தான் வெகு­வாக ஊக்­கு­விப்­ப­தாக அவர் கூறினார்.

2022 உல­கக்­ கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளின்­போது, வர­வேற்பு நாடான கத்­தாரின் மனித உரி­மைகள் நிலை­வ­ரத்தை ஜேர்­மனி கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்­தது.

1936 ஆம் ஆண்டின் பின்னர் 1972 ஆம் ஆண்டின் கோடைக்­கால ஒலிம்பிக் போட்­டி­களை ஜேர்­மனி நடத்­தி­யி­ருந்­தது.

எதிர்­வரும் கோடைக் கால ஒலிம்பிக் போட்­டிகள் 2024ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடை­பெ­ற­வுள்­ளன. 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலும் 2032 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்­பேன் நகரிலும் ஒலிம்பிக் போட்டி­கள் நடைபெறவுள்ளமை குறிப்­பிடத்­தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: