இலங்கை சினிமா

இலங்கை சினிமா வரலாற்றில் ஓர் புதிய பாய்ச்சல்; சரித்திர கதை சொல்லும் ‘கிரிவெசிபுர’ திரைப்படம்.

இலங்கையின் சினிமா வரலாற்றிலேயே மாபெரும் பொருட்செலவில், காட்சியமைப்பில் உருவாகியுள்ள ‘கிரிவெசிபுர’ சரித்திர திரைக்காவியம் நான்காண்டு கால கடும் முயற்சியின் பின்னர் மார்ச் மாதம் 14ஆம் திகதி வெளியாகியுள்ளது.

கண்டி இராச்சியத்தை ஆண்ட இறுதி மன்னனான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின் அரச வரலாற்றை அடியொற்றி படைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை தேவிந்த கோங்ககே இயக்கியுள்ளார்.

‘2023 சினிமா அபிமான’ திரைப்பட விழாவில் நேற்று முன்தினம் ‘கிரிவெசிபுர’ சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்ட நிகழ்வில் படக்குழுவினரும் கலந்துகொண்டு, இந்த படத்துடனான நான்காண்டு கால பயணம் தொடர்பான தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

அதேவேளை இந்தப் படம் வெளியான அன்று இலங்கையில் உள்ள 16 திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு, திரையரங்கங்களில் நிறைந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், உப தலைப்புகளோடும் படம் உருவாக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இலங்கையின் தமிழ் மற்றும் சிங்கள திரைப்பட கலைஞர்கள் இதில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ”நிரஞ்சனி சண்முகராஜா, நவயுகா குகராஜா, ஜூலியானா” போன்றோர் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

மேலும் இத்திரைப்படத்தில் பிரதான மன்னர் கதாபாத்திரத்தில் ஊடகவியலாளரான எல்றோய் அமலதாஸ் அவர்கள் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்தியாவின் தமிழ் பேசும் தெலுங்கு நாயக்க மன்னரை பற்றிய கதை என்பதால் இலங்கை கடந்து இந்திய அளவிலும் இப்படம் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: