விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் விநியோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் சமூக பராமரிப்பு நிலையத்தினால் ஹியூமன் எயிட் விஷேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு கடந்த உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.எம் றமீஸா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் மற்றும் ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான
எம். கனலோஜினி
ஜே .நிலோஜா (முதியோர் உரிமை மேம்பாடு)
எம்.ஏ.எம். இல்யாஸ் ஈ.எல்.எம் அஷ்ரப், ஏ.எல்.எம். இர்ஷாத் (அபிவிருத்தி )ஆகியோரின் பங்குபற்றினர்.
இதன்போது விசேட தேவையுடைய மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.
நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான காலை உணவு வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் ஆக்க செயற்பாடுகளைப் பார்வையிட்ட உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.எம் றமீஸா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

