இலங்கைகிழக்கு மாகாணம்

சிங்கள மொழிப் பாடநெறியின் இறுதி  நிகழ்வு

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அரச மொழிகள் திணைக்களத்தினால்    அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வானது அண்மையில் (மே 21)  காத்தான்குடி பிரதேச செயலாளர் உ .உதயஸ்ரீதர்  தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இச்சிங்கள மொழிப் பாடநெறி பெப்ரவரி மாதம் 7திகதி முதல் நடைபெற்ற  இப்பாட நெறியில் 37 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இப்பாடநெறியினை பூர்த்தி செய்துள்ளனர்.

 வளவாளராக கலந்து கொண்ட  எஸ்.ஜெயராஜ் ஆசிரியருக்கு பிரதேச செயலாளர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஜே.எம்.ஜலால்தீன், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: