இலங்கைஇன்றைய செய்திகள்மலையகம்முக்கிய செய்திகள்

வரட்சியான காலநிலையால் மத்திய மலைநாட்டு நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவு

மத்திய மலையக பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 45 அடி குறைந்து தற்போது 75 அடி நீர் உள்ளது.

காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 25 அடி குறைந்து உள்ளது.

நீர் மின்சார உற்பத்திக்காக நீரை சேமித்து வைக்கும் நீர் தேக்கங்கலான மவுசாகல காசல்ரீ ஆகிய இரண்டு நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இந்த இரண்டு நீர் தேக்கங்களில் இருந்து கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, கலுகல, ஆகிய நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது.விமலசுரேந்திர மற்றும் ஏனைய நீர் மின் நிலையங்களும் இயங்கி வருகிறது.

தொடர்ந்து வரட்சி தொடரும் பட்சத்தில் மலையக பகுதிகளில் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: