இலங்கைஉலகம்முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆதரவை இலங்கை இழக்கும் சாத்தியம்

12 பில்லியனுக்கும் அதிகமான கடனை மறுசீரமைப்பதற்கான சர்வதேச பத்திரதாரர்களின் முன்மொழிவை இலங்கை ஏற்றுக்கொள்ளாமையானது, சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆதரவை இழக்கக்கூடும் என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

முடிந்தவரை விரைவில் மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்த நம்புவதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்தாலும் தொடர் கலந்துரையாடல்களை பத்திரக்கார்களின் வழிகாட்டல் குழு நிராகரித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் சில வாரங்களில் சமரசம் இல்லையெனில், சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணைக்கான ஆதரவுப் பணமும் தாமதமாகலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை ஏற்கனவே அதன் முக்கிய அரசாங்க கடன் வழங்குநர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

ஆனால் அதன் 2.9 பில்லியன் டொலர் திட்டத்தின் அடுத்த 337 மில்லியன் டொலர்கள் தவணைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கு சர்வதேச பத்திரப்பதிவுதாரர்களுடன் உடன்படிக்கை தேவைப்படுகிறது.

இந்நிலையில் பத்திரதாரர்களின் முன்மொழிவுகள் “அடிப்படை அளவுருக்கள்” சர்வதேச நாணய நிதியத் திட்டத்துடன்; பொருந்தவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: