இலங்கைஇன்றைய செய்திகள்முக்கிய செய்திகள்வட மாகாணம்

வடக்கில் மின்சாரத்தைக் கழிவு விலையில் வழங்கத் தீர்மானம்- தர்மா வன்னிநாயக்கா

வடமாகாண விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க அவர்கள் தமது விவசாயத் தேவைகளுக்குப் பாவிக்கும் மின்சாரத்தைக் கழிவு விலையில் வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்திருப்பதாக அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் தர்மா வன்னிநாயக்கா தெரிவித்தார்.

“வடமாகாணத்தில் ஆறுகளோ, குளங்களோ இல்லாதபடியால் அவர்கள் கிணறுகளிலிருந்து தமது விவசாய நிலங்களுக்கு இயந்திரங்களைக்கொண்டு நீர்பாய்ச்ச வேண்டியுள்ளது. இதனால் அவர்களது மின்சாரக் கட்டணம் அதிகமாகவிருக்கிறது” என அவர் ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது தெரிவித்தார்.

“போர்க்காலத்தில் வடமாகாண விவசாயிகள் வெகுவாகப்பதிக்கப்பட்டிருந்தபோதும் அவர்கள் தமது விவசாய நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவில்லை. இப்போதும் நாட்டின் பொருளாதாரத்துக்கு அவர்கள் கணிசமான பங்களிப்பைச் செய்துவருகிறார்கள். எனவே அவர்களது கோரிக்கையை நான் அமைச்சரவையில் சமர்ப்பித்திருக்கிறேன். அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதும் அவர்களுக்கு இச்சலுகை கிடைக்கும். இது அவர்களது விவசாயத் தேவைகளுக்கு மட்டுமே உரியதாக இருக்கும்” என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இச்சலுகை கிழக்கு மாகாண விவசாயிகளுக்கும் கிடைக்குமா என வினவியபோது “இக்கோரிக்கையை வடமாகாண விவசாயிகள் மட்டுமே முன்வைத்தார்கள், கிழக்கு மாகாண விவசாயிகள் கேட்டுக்கொள்ளவில்லை. அத்துடன் கிழக்கில் குளங்களும் இதர நீர்ப்பாசன வசதிகளும் உண்டு. அத்தோடு ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரும் வடமாகாண விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்குப் பணித்திருந்தார்கள் ” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: