இலங்கைமுக்கிய செய்திகள்

தென்னிலங்கையில் பேஸ்புக் காதலால் யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பெந்தோட்டை பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட இளைஞனை முதல் முறையாக நேரில் சந்திக்க சென்ற யுவதியின் லட்ச கணக்கு பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட இளைஞனின் அழைப்பின் பேரில் பெந்தோட்டை பிரதேசத்திற்கு சென்ற 20 வயது யுவதிக்கு இளைஞன் ஒருவர் ஒரு வகையான போதை பானம் குடிக்க கொடுத்துள்ளார்.

அதனை குடித்த யுவதி மகயக்கமடைந்தவுடன் அவரது 2 லட்சம் பெறுதியான தங்க சங்கிலி, பெண்டன், மோதிரம் உள்ளிட்ட தங்க நகையை திருடியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆதாவளை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இந்த யுவதி, சில காலமாக கையடக்கத் தொலைபேசியில் உரையாடிய அளுத்கம கலவில பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனைச் சந்திப்பதற்காக பெந்தோட்டை பிரதேசத்தைத் தெரிவு செய்துள்ளார்.

அங்கு இருவரும் கடற்கரை அருகே சந்தித்து பேசிவிட்டு உணவகத்திற்கு சென்று அந்த இளைஞன் கொடுத்த பானத்தை குடித்து சில மணித்தியாலங்களின் பின்னர் தான் அணிந்திருந்த தங்க பொருட்கள் காணாமல் போனதை அறிந்து அந்த பெண் அங்கிருந்தவர்களிடம் உதவி கோரியுள்ளார்.

பின்னர், தனது கைத்தொலைபேசியில் இருந்த இளைஞனின் புகைப்படத்தை சுற்றியிருந்தவர்களிடம் காண்பித்துள்ளார். அவர் கலாவில பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் பெந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றதால், யுவதி பெந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தனது தாயுடன் முறைப்பாடு செய்துள்ளார்.

பெந்தோட்டை பொலிஸார் சம்பந்தப்பட்ட இளைஞரைக் கண்டுபிடித்து அவரது வீட்டுக்குச் சென்ற போது, ​​அவர் வீட்டை விட்டு ஓடியமை தெரியவந்துள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: