உலகம்பிரபலமானவை

இங்கிலாந்தில் அறிமுகமாகும் பேஸ்புக் நிறுவனத்தின் புதிய வசதி!!

பேஸ்புக் நிறுவனத்தின் தாயகமான மெட்டா நிறுவனமானது தற்போது கட்டணம் செலுத்தி புளூ டிக் பெறும் வசதியை இங்கிலாந்தில் ஆரம்பித்துள்ளது.

இந்த வசதியானது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வளைத்தளங்களிலும் தற்போது அறிமுகமாகியுள்ளது.

மாதாந்தம் £9.99 பவுண்ட் இற்கு இந்த வசதி வழங்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரபூர்வமானது என்பதை உறுதிப்படுத்த, பேஸ்புக் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற குறியீடு புளூ டிக் குறிக்கப்பட்டிருக்கும்.

பல்வேறு அம்சங்கள்
இதன்மூலம், குறிப்பிட்ட பயனாளர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த கட்டணம் செலுத்தப்பட்ட புளூ டிக் வசதியை பெற வேண்டுமாயின் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் அரசு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அம்சம் ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: