இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்

சிறுதானிய செய்கை மேற்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல்

கடும் வறட்சியான காலநிலை காணப்படுவதால் அதிக நீர் ஆவியாகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதானிய செய்கை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம்.

நெற்செய்கைக்கு அதிக நீர் தேவைப்படுகின்றது. இதனால் அதிகளவிலான நீர் ஆவியாகி வீணாகின்றது. அதனைத் தவிர்க்கும் வகையில் 1000 ஏக்கரில் சிறுதானிய செய்கையை மேற்கொள்வது தொடர்பில் முதல் கட்டமாக ஆராய்ந்திருந்தோம். அதற்கு சாதகமான சூழல் காணப்படுகின்றது.

அதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது. அது தவிர கிளிநொச்சி சேவைச் சந்தையின் குறைபாடுகள், பூநகரி பிரதேச சபை ஊடாக மணல் விற்பனை நிலையம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

கிடைக்கும் மணல் வளம் நியாயமில்லாமல் மக்களிற்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. அதனை கட்டுப்படுத்தவே இவ்வாறு  நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: