இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்

கிளிநொச்சியில் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (28) இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்தக்காரர்கள், பிரதேச செயலாளர்கள் கிராம மக்கள், மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரமைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.

அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர்ப் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின் பிரதான வீதியை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பல கிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: