உலகம்

காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவு

கடந்த ஆண்டு அக்போடர் மாதத்தில் இஸ்ரேல் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், கண்ணில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது.

மேலும், 200-க்கும் மேற்பட்டோரைப் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது. இந்த கொடூர சம்பவம் காரணமாக ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. 

கடந்த ஏழு மாதங்களாக காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசா எல்லையின் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா நகரத்தில் வசிக்கும் பொது மக்கள் விரைந்து அப்பகுதியில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.

புதிய திட்டமிடலின் கீழ் பெய்ட் லஹியாவில் உள்ள ஹமாஸ் உள்கட்டமைப்பு பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட இருப்பதால் இந்த அறிவிப்பை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“நீங்கள் மிகவும் அபாயகரமான போர் மண்டலத்தில் இருக்கின்றீர்கள். உங்களைக் காப்பாற்றிக் கொள்ள உடனடியாக இப் பகுதியில் இருந்து வெளியேறிவிடுங்கள்,” என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: