உலகம்முக்கிய செய்திகள்

இத்தாலியில் மற்றுமொரு இலங்கையர் விபத்தில் பலி!!

இத்தாலியில் உள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ருவன் மனோஜ் குமார் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் ஆறு மாத வேலைக்காக சுற்றுலா விடுதியில் பணிபுரிய வந்துள்ள நிலையில் ஓவியமொன்றினை வரையும் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை
இந்த மரணம் உடல் நலக்குறைவு காரணமாக நேர்ந்ததா அல்லது கவனக்குறைவினால் ஏற்பட்டுள்ளதா என்பதினை அறிய பிரேத பரிசோதனைக்காக சடலம் லிபாரி தீவு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்தவர் வென்னப்புவ லுனுவில பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: