இலங்கைகிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

தொழில் வாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் புகைப்படம் மற்றும் கமரா பழுது பார்த்தல் பயிற்சி

அம்கோர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகக் கற்கைகளை மேற்கொண்டுவரும் வொய்ஸ் ஒப் மீடியா நெட்வோர்க் நிறுவனம் போடோகிரபி அன்ட் கமரா ரிபெயாரிங் பயிற்சிநெறியை ஆரம்பித்துள்ளது.

அம்கோர் நிறுவனத்தின் சமூகப் பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம்பெயர்தலை மட்டுப்படுத்தலும் எனும் ரீசம் -II செயற்திட்டத்தில் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சியானது நேற்று(22) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடகக் கற்கைகளுக்கான நிறுவகத்தில் உத்தியோகப் பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

சர்வதேச தரச் சான்றிதழ் தகைமையைக் கொண்ட நிக்கோன் ஸ்கூல் மற்றும் கமரா ஹவுஸ் நிறுவனங்களின் விரிவுரையாளர்கள் வருகை தந்து இப்பயிற்சி நெறியை நடாத்தி வருகின்றனர்.

இப் பயிற்சியில் 20க்கும் மேற்பட்ட மட்டக்களப்புப் பிரதேச இளைஞர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

இலங்கையில் முதற் தடவையாக இங்கு கமரா பழுதுபார்த்தல்ப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: