இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்

திருக்கோவில் ஆதார வைத்தியசால செயற்பாடுகள் நாளை முதல் வழமைக்கு

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் 15 நாட்கள்  இடம்பெற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று புதன்கிழமை (27) முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் இன்று 4 மணி தொடக்கம் அவசர சிகிச்சை பிரிவு ஆரம்பமாகியதுடன் ஏனைய பிரிவுகள் நாளை வியாழக்கிழமை வழமைக்கு திரும்பவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தினர்.

இதனையடுத்து வைத்தியசாலை வைத்தியர்கள் தமக்கு பாதுகாப்பு இல்லை என கோரி பணிப்புறக்கணிப்பில் கடந்த 12 ம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வலுச்சேர்க்கும் முகமாக நேற்று செவ்வாய்க்கிழமை நிந்தவூர், சம்மாந்துறை  அக்கரைப்பற்று வைத்தியசாவை வைத்தியர்களும் கவனயீர்பு; போராட்மாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனை தொடாந்து இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு கைவிட்டனர்.

இன்று மாலை 4 மணி தொடக்கம் அவசர சிகிச்சை பிரிவு ஆரம்பமாகியதுடன் ஏனைய பிரிவுகள் நாளை வியாழக்கிழமை தொடக்கம் வழமைக்கு திரும்பவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: