இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்
திருகோணமலையில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள்
திருகோணமலை -சேருநுவர பகுதியில் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் இன்று(20) இடம்பெற்றது.
சேருநுவர சிவில் பாதுகாப்புப்படையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முட்டி உடைத்தல், தலையணைச் சமர் மற்றும் மரதன் போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
போட்டி நிகழ்ச்சிகளில் அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.