இலங்கைமுக்கிய செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் முக்கிய திட்டம்!!

இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் போது ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் பரீட்சார்த்திகள் பாதிக்கப்படாத வகையில் தேவையான பாதுகாப்பை தயார்ப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து இது தொடர்பான பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (17.05.2023) ஊடகம் ஒன்றுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அனர்த்த நிலைமை
பரீட்சை காலப்பகுதியில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் வகையில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு பிரதேசத்திலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டாலும் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் பரீட்சை முடியும் வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: