இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்

கிளிநொச்சியில் தேசிய மரநடுகைத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

புத்தாண்டை முன்னிட்டு சுபநேரத்தில் ஏற்றுமதி ஆற்றல், வளமுள்ள பல்பருவப் பயிர் நடுகை திட்டத்தின் கீழ் “சுப நேரத்தில் ஒரு மரம்” திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அதனடிப்படையில் “சுப நேரத்தில் ஒரு மரம்” தேசிய மரநடுகைத் திட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் இன்று(18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இ. நளாயினி கொடுத்த திட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர் அ. செல்வராஜா மற்றும் மாவட்ட விவசாயக் கிளை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர 2020ம் ஆண்டு சுற்றாடல் அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு “சுப நேர கன்று நடுகை நாட்டுக்கு உயிர் கொடுக்கும்’ என்ற தேசிய மரக்கன்றுகள் நடுகைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார்.

அந்த வகையில், கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைதொழில் அமைச்சின் ஏற்பாட்டில், குறித்த திட்டமானது இவ் வருடமும் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: