இலங்கைமுக்கிய செய்திகள்வட மாகாணம்

காணிகளை விடுவிப்பதற்கான அளவீடுப் பணிகள்

யாழ்ப்பாணம் – வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளை சட்ட ரீதியாக விடுவிப்பதற்கான அளவீடுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று (19) ஆரம்பமாகியுள்ளது.

2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் அரச காணிகளிகளாக சுவிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சுமார் 6300 ஏக்கர் காணிகளில் கணிசமானவை தற்போது விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

எனினும், குறித்த காணிகள் சட்ட ரீதியாக இப்போதும் அரச காணிகளாகவே காணப்படுகின்றமையினால், 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப் பெறுகின்ற வகையில் புதிய வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது. இதற்காக குறித்த காணி அளவீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யுத்தம் காரணமாக இராணுவத் தேவைகளுக்காக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்து காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசு உடமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் அரச காணிகளிகளாக சுவிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சுமார் 6300 ஏக்கர் காணிகளில் கணிசமானவை தற்போது விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விரிவாக கலந்துரையாடிய நிலையில், குறித்த 2013 வர்த்தமானியை மீளப்பெறுவதற்கும், தற்போதும் விடுவிக்கப்படாமல் இருக்கின்ற சுமார் 2900 ஏக்கர் காணிகளில் முடிந்தளவு காணிகளை விடுவிப்பதற்கும் காணி அளவீடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.” என்று தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் இரண்டு மாதங்களில் குறித்த பணிகள் நிறைவுக்கு வரும் என தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில், ஜனாதிபதி செயற்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கா தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் தீர்மானப்படி இன்று அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன், யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன், நில அளவைத் திணைக்கள மாகாண பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச செயலர், நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: