இலங்கைகிழக்கு மாகாணம்

கல்முனையில் சூழல் நேய அமைப்பின் உலக பூமி தினக் கொண்டாட்டம்

2024 இற்கான ‘பூகோளமும் பிளாஸ்டிக்கும்’; எனும் பூமி தினக் கருப்பொருளுக்கமைவாக பிளாஸ்டிக் பாவனையினால் ஏற்படும் தாக்கத்தினைக் குறைத்தலும் மரம் நடுகை செயற்பாட்டினை மேம்படுத்தும் நோக்கோடும் சுற்றாடல் முன்னோடி மாவட்ட இணைப்பாளர் புஸ்பராஜினி செவ்வேட்குமரன் ஒழுங்கமைப்பில் கல்முனையில் நேற்று(22) சூழல் நேய அமைப்பினருடன், சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தைப் பெற இருக்கும் மாணவர்கள் இணைந்து உலக பூமி  தினத்தினைக் கொண்டாடினர்.

இத்தினத்தினை நினைவு கூறும் முகமாக கல்முனை வடக்குப் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கும், கல்முனை ஆதார வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்களுக்கும் பழமரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பூமியினைப் பாதுகாத்தல் தொடர்பான பதாதைகளும் , துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

இத்துடன் இத்தினத்தை முன்னிட்டு கல்முனை கமு/கமு/கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: