இலங்கைமுக்கிய செய்திகள்

பொதுவெளியில் மக்களின் கவனத்தை ஈர்த்த அநுர மற்றும் சஜித்!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் சிநேகபூர்வமாக உரையாடும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அமரபுர பிரிவைச் சேர்ந்த மகாநாயக்க தேரரின் இறுதிக்கிரியை நிகழ்விலேயே இருவரும் சந்தித்துள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இரு தலைவர்களும் நாட்டின் நம்பிக்கை என்றும், ஒன்று சேர்ந்தால் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றும் பெரும்பாலானோர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: