இலங்கைவட மாகாணம்

வவுனியாவில் சிறுமி மரணம்- நீதி கோரி பொதுமக்களால் பொலிஸ் நிலையம் முற்றுகை

அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று(19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், நேற்று இறுதிக்கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சித்தப்பாவே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதிப் போக்குவரத்தானது தடைப்பட்டமையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: