இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்

முல்லைத்தீவிற்கு இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விஜயம்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று(28) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அம்பலவன் பொக்கனைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சரை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் வரவேற்றதுடன், இரட்டைவாய்க்கால் – மாத்தளன் சாலை வீதி புனரமைப்பு தொடர்பில் நேரடியாக பார்வையிட்டதோடு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இக் கள விஜயத்தின் போது கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் திரு. காதர் மஸ்தான், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அங்கஜன் இராமநாதன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ம. உமாமகள், கிராம அலுவலகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: