உலகம்கனடா

புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிக்க அமெரிக்காவும் கனடாவும் ஒப்பந்தம்!

அமெரிக்காவும் கனடாவும் அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கடவுகளில் புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒட்டாவா விஜயத்தின் போது, இருநாட்டு தலைவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த ஒப்பந்தத்தை அறிவிப்பார்கள்.

இந்த ஒப்பந்தம் எல்லையின் இருபுறமும் உள்ள அதிகாரிகளை இரு திசைகளிலும் செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திரும்பப் பெற அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையும் அமெரிக்கத் தரப்பில் உயர்ந்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டள்ளது.

நியூயோர்க் மாநிலத்திற்கும் கியூபெக் மாகாணத்திற்கும் இடையே உள்ள அதிகாரப்பூர்வமற்ற குறுக்கு வழியான ரோக்ஸ்ஹாம் வீதியில் குடியேறுபவர்களின் வருகையை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையில் இருந்து தப்பிச் செல்லும் 15,000 புலம்பெயர்ந்தோருக்கான புதிய அகதித் திட்டத்தை கனடா உருவாக்கும் என்று பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

பைடன், கனடாவின் ஒட்டாவாவில் 24 மணிநேரம் ட்ரூடோவுடன் தொடர் பொருளாதார, வர்த்தகம் மற்றும் குடியேற்றப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகிறார். அவர் வெள்ளிக்கிழமை அமெரிக்கா திரும்புவதற்கு முன் இடம்பெயர்வு ஒப்பந்தம் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த ஒப்பந்தம் இரு தரப்பினரின் 2004 ஆம் ஆண்டு பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தத்தில் ஒரு திருத்தம் ஆகும்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: