இலங்கைகொழும்பு

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா புதிய திட்டம்

நவீன சிகிச்சைகளுக்கு உதவி சீனாவில் தற்போதைய காலமாக குழந்தை பிறப்பு விகிதம் மிகக் கடுமையாக குறைந்துள்ளது. இதை தடுப்பதற்கும், தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கவும், பல முயற்சிகளை சீன அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பீஜிங்கின் அரசு, நகரின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் கீழ் கருத்தரித்தலுக்கான 16 வகையான தொழில்நுட்ப சிகிச்சை கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக மக்கள் தொகை வீழ்ச்சியை பதிவு செய்த சீனா, குழந்தை பிறப்பு குறைவதைத் தடுக்க போராடி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 என்ற அளவில் குறைந்திருக்கிறது. மேலும், 2023 இல் இதை விட குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருவுறுதல் விகிதங்களை ஆதரிக்கும் வகையிலும் அதிகப்படுத்தும் வகையிலும் சீர்திருத்த சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய வழிகாட்டுதல்களை மாகாணங்களுக்கு வழங்கியுள்ளது.

சீனாவில் உள்ள தேசிய சட்ட விதிகளின் படி தற்பொழுது நாட்டில் உள்ள திருமணமாகாத பெண்கள் இது போன்ற உயர் தொழில்நுட்ப சிகிச்சைகளை பெறுதல் கடினம்.

தென்மேற்கு சிச்சுவான் மாகாணம் போன்ற மாகாணங்களில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு குறைவதால், ஏற்கனவே இன் – விட்ரோ கருத்தறித்தல் போன்ற தொழில்நுட்பங்களை அனுமதிக்கத் தொடங்கியுள்ளன.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: