இலங்கைஇன்றைய செய்திகள்முக்கிய செய்திகள்

திருட்டு தொடர்பான குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான விசேட செயற்றிட்டம்

நாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு, வீடு உடைப்பு மற்றும் தங்கச் சங்கிலி பறிப்பு போன்ற குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான விசேட செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மே மாதம் முதலாம் திகதி முதல் இவ் விசேட செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அறிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த விசேட நடவடிக்கைக்காக பொலிஸ் பிரிவுகளில் 60 வீதமான பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் நிலையங்களுக்கு வெளியே நெடுஞ்சாலை கடமைகளில் உடனடியாக ஈடுபடுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே முதலாம் திகதி முதல் மூன்று மாதங்களுக்குள் இவ் விசேட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தவும், கடந்த வருடம் பதிவான 32 சதவீத வன்முறைக் குற்றங்களை மிகக் குறைந்த மட்டத்திற்குக் குறைக்கவும் பொலிஸ் மா அதிபர் இலக்கு நிர்ணயித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: