உலகம்முக்கிய செய்திகள்

காசாவில் நடைபெறும் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

காசாவில் நடைபெற்று வரும் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார். மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் தற்போது உடல்நலம் தேறி வருவதையடுத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

87 வயதான போப் பிரான்சிஸ், கடந்த புதன்கிழமை ரோம் மருத்துவமனையில் சளி தொந்தரவு காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ், இஸ்ரேஸ் ஹமாஸ் போர் முடிவு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்ரேல் – பலஸ்தீனம் விவகாரத்தில் தினந்தோறும் பொதுமக்கள் பாதிக்கப்படுவது, ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பது, படுகாயமடைவது, அகதியாவது உள்ளிட்டவை என் மனதை வேதனையில் ஆழ்த்துகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: