அமொிக்காமுக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கும் தமிழர்: பாராட்டிய டிரம்ப்!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட களமிறங்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி வரை அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

விவேக் ராமசாமிக்கு பாராட்டு
இதற்காக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலுக்கு அவர் விண்ணப்பித்துள்ளார்.

இந்த வேட்பாளர் தேர்தலுக்கு அக்கட்சியைச் சேர்ந்த முக்கியத்தலைவர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 37 வயதுடைய தொழிலதிபரான விவேக் ராமசாமியும் ஒருவர். மற்றொரு இந்திய வம்சாவளியினரான நிக்கி ஹாலேயும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விவேக் ராமசாமியை தனது சமூக வலைதள பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கும் தமிழர்: பாராட்டிய டிரம்ப் | Trump Praises Vivek Ramaswamy

நல்ல விடயங்களே உள்ளன
அதில் அவர் கூறியுள்ளதாவது, “விவேக் ராமசாமி எனக்குப் பிடித்தமானவர். அவரைப் பற்றி கூறுவதற்கு நல்ல விடயங்களே உள்ளன. அண்மைய ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் அவர் சிறப்பாகச் செயல்பட்டார்.

‘ ஜனாதிபதி ட்ரம்ப்’ குறித்தும் ட்ரம்ப் நிர்வாகம் குறித்தும் அவர் நல்ல விடயங்களை மட்டும் கூறக்கூடியவர். அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: