சினிமா
டிரெண்டிங்

ஒஸ்கார் விருது வென்ற பாரசைட் திரைப்பட நடிகர் லீ சுன் கியுன் திடீர் மரணம்

இயக்குனர் பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பாரசைட்’.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நான்கு பிரிவுகளில் ஒஸ்கார் விருதை வென்றது.

இந்த படத்தில் லீ சுன் கியுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் லீ சுன் கியுன் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான ‘லவ்வர்ஸ்’ என்னும் சிட்காம் தொடரில் அறிமுகமானார்.

2014ஆம் ஆண்டு இவர் நடித்த ‘எ ஹார்ட் டே’ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கடைசியாக இந்த ஆண்டு வெளியான ‘ஸ்லீப்’ என்ற படத்தில் லீ சுன் கியுன் நடித்திருந்தார்.

48 வயதாகும் லீ சுன் கியுன் இன்று (27) சியோல் நகரில் உள்ள ஒரு பார்க்கில் தனது காரின் உள்ளே இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.லீ சுன் கியுன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: