அமொிக்காபிரபலமானவை

இன்று மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா!!

கடந்த செப்டம்பரில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின்னர் வேல்ஸ் இளவரசரான மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.

74 வயதான மூன்றாம் சார்லஸ் மன்னர் இன்று (சனிக்கிழமை) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் முடிசூடப்படவுள்ளார்.

இந்த ஆண்டு முடிசூட்டு விழாவில் அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 100 அர தலைவர்கள் உட்பட சுமார் 2,200 அழைக்கப்பட்ட விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர்.

மன்னன் சார்லஸின் இரண்டாவது மகனான சசெக்ஸ் பிரபு இளவரசர் ஹரி, முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் இருந்து பிரிட்டன் வந்தடைந்தார்.

அரச குடும்பத்தின் தற்போதைய பங்கை பிரதிபலிக்கும் வகையில் முடிசூட்டு விழாவின் சில அம்சங்கள் நவீனப்படுத்தப்பட்டாலும், 1953 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் காணப்பட்ட நீண்டகால மரபுகள் இம்முறையும் தொடரும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

கிங் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து சிறப்பு ஊர்வலமாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு வர உள்ளனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஏற்கனவே வீதியின் இருபுறங்களிலும் பெருந்திரளான மக்கள் திரண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: