தொழில்நுட்பம்

“இனி உலகம் பழையபடி இருக்காது!” மாற்றங்கள் ஒவ்வொன்றும் அதிர வைக்கும்.!

அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடியின் வெற்றி என்பது பல்வேறு ஏஐ நிறுவனங்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. அதன் பிறகு முதலீட்டாளர்கள் பலரும் ஆர்வமாக ஏஐ மாடல்களில் முதலீடு செய்தனர். இதுவே ஏஐ தொழில்நுட்பம் விஸ்வரூப வளர்ச்சியை அடையக் காரணமாக இருந்தது.ஏஐ மாடல்கள்:

ஏஐ தொழில்நுட்பம் காரணமாக வரும் காலத்தில் கண்டுபிடிப்புகளும் மாற்றங்களும் மிக விரைவாக நடக்கத் தொடங்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே ஏஐ மாடல்கள் குறித்து மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஏஐ மாடல்களால் 2024இல் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பில் கேட்ஸ் கூறுகையில், “வளங்கள் குறைவாக இருக்கும் இந்த உலகில், நாம் தாக்கத்தை அதிகரிக்க வழிகளைக் கண்டறிய வேண்டும்.. புது புது கண்டுபிடிப்புகள் மூலமாகவே நமக்குக் குறைந்த செலவில் அதிக நன்மைகள் கிடைக்கும். ஏஐ தொழில்நுட்பம் என்பது பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். இது நாம் பார்க்காத அளவுக்கு மிக வேகமாக புதிய கண்டுபிடிப்புகள் நடக்கும்.உலகமே மாறும்: குறிப்பாக புது வகை மருந்துகள் கண்டுபிடிப்புகள் வேகமாக இருக்கும்.

ஏஐ நமது ஆய்வுகளுக்கு உதவும் என்பதால் நம்மால் அதிகப்படியான டேட்டாக்களை குறைந்த காலகட்டத்தில் பிராசஸ் செய்ய முடியும். இதன் மூலம் மிக குறுகிய காலத்தில் புது மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியும். ஏற்கனவே சில நிறுவனங்கள் புற்றுநோய் மருந்துகளை உருவாக்க ஏஐ மாடல்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா என்று மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களுக்கு மருந்துகளைக் கண்டுபிடிக்க ஏஐ டூல்கள் உதவும்.

கேட்ஸ் அறக்கட்டளை மூலமாகவும் நாம் இதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளோம். குறிப்பிடத்தக்கச் சுகாதார சவால்களை எதிர்கொள்ள இந்த ஏஐ மாடல்களை நாம் பயன்படுத்தலாம். இது மிகவும் ஆர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும்.

உதவும்: மேலும், பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கருவுக்கு எதாவது பாதிப்புகள் இருக்கிறதா என்பதையும்

ஏஐ மாடல்கள் மூலம் கண்டறிய முடியும். பிரத்தியேகமாக இதற்காக சில ஏஐ டூல்களை உருவாக்கும் ஆய்வுகளும் நடந்து வருகிறது. இது உலகெங்கும் குறிப்பாக இந்தியாவில் உள்ள தாய்மார்களுக்கு உதவும் என்றே நம்புகிறேன். குறிப்பாகப் பிரசவ காலத்தில் இந்த ஏஐ டூல்கள் சுகாதார ஊழியர்களுக்கு உதவும். இது உள்ளூர் மொழிகளிலும் இருப்பது மற்றொரு சிறப்பாகும்” என்று அவர் கூறுகிறார்.

ஏஐ மாடல்களால் உலகம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்றாலும் இதனால் வேலையிழப்பு தொடங்கி பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: