மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனமானத்தினால் சுய தொழில் முயற்சியாளர்களின் மேம்பாட்டை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள “தையல் வர்த்தக நிலையம்” மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் “சாமஸ்ரீ தேசமான்ய உ.உதயகாந்த் (JP) தலைமையில் இடம் பெற்ற திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன்
அவர்கள் கலந்து சிறப்பித் ர்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வியாபார மேம்படுத்தல் உத்தியோகஸ்தர் நாகேந்திரன் கோகுலதாஸ் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் தையல் துறையில் ஆர்வமுள்ள சுய தொழில் முயற்சியாளர்களாக திகழும் நால்வரின் தொழில் முயற்சியினை மேம்படுத்தும் நோக்கிலேயே குறித்த தையல் வர்த்தக நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
“சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியாய் மிளிர்வோம்” எனும் தொனிப்பொருளில் சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியேற்றும் முகமாக ஆரம்பிக்கப்படவுள்ள “தையல் வர்த்தக நிலையம்” மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான சந்தைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதியின் ஆறாம் இலக்க கடையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகள் தைத்தல், ஆரி வேக் செய்தல், தலையணை உறை தைத்தல் மற்றும் துணி வேக் தைத்தல் போன்ற செயற்பாடுகள் நேர்த்தியாக குறைந்த செலவில் வடிவமைப்பு செய்து வாடிக்கையாளர்களை திருத்திப்படுத்தும் வகையில் இந்நிலையம் செயற்படவுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் உ.உதயகாந்த் (JP) இங்கு உறையாற்றுகையில் தெரிவித்திருந்தார்.
மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனமானது கடந்த ஒரு வருடமாக சுயதொழில் முயற்சியாளர்களது மேம்பாடு மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு மிகவும் திறம்பட செயலாற்றிவருவதுடன் இம்முயற்சிக்கு சிவனருள் பவுண்டேசன் அமைப்பும் தமது அனுசரனையினை வழங்கி தையல் இயந்திரம் உள்ளிட்ட உபகரண தொகுதிகள் சிலவற்றையும் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.