இஸ்லாமிய அமைப்புக்கள் அரசியல் வாதிகள் மதரீதியாக வன்முறை : சிவதர்சன் கோரிக்கை

திட்டமிட்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் மீண்டும் மதரீதியாக  வன்முறையை தூண்டுவதற்காக இஸ்லாமிய அமைப்புக்களும் சில அரசியல்வாதிகளும் முயற்சித்து வருகின்றனர்

நாட்டின் இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறு இன மத கலவரத்தை தூண்டக்கூடிய இவர்களை அரசாங்கம் உடன் கைது செய்ய வேண்டும் என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி தலைவர் சிவதர்சன்  கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய  நபர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்தேன்  முடிந்தால் இலங்கை அரசாங்கம் பார்க்கட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹித் ரகுமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக ஒருவரை கைது செய்தது இலங்கை அரசின் பாதுகாப்பு சம்மந்தமான விஷயம் ஆனால் பயங்கரவாத சிந்தனையில் உள்ள ஒருவரை கைது செய்த அந்த விஷயத்தை தான் செய்வேன் என தெரிவித்து முன்னிற்கும் இப்படியான அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் போது பயங்கரவாதம் தலைதூக்கும்.

கடந்த 2019 ஏப்பிரல் 21 இதேபோன்ற ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஸாரான் என்ற பயங்கரவாதியால் அப்பாவி கிறிஸ்தவ மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். எனவே நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளும் அதை விடுத்து சிலர் இதனை அரசியலாக்கி மதரீதியான ஒரு பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

இந்த நிலையில் கிழக்கில் கல்முனையில் சூப்பர் முஸ்லீம் என்ன இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.  இவர்கள் மத தீவீரவாதத்தை பரப்புகின்றனர்? என கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. ஏன் என்றால் ஸாரானிலால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை

இந்நிலையில் ஸாரானினால் மேற்கொண்ட இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த  மக்களுக்கான நீதி மௌனிக்கப்பட்ட கொண்டிருக்கின்றது இந்த தாக்குதலுக்கு   முஜாஹித் ரகுமான்   என்ற அரசியல்வாதி நீதிகேட்டு நாடாளுமன்றில் பேசி இருப்பாரா? எனவே இவர் இந்த திட்டமிட்டு செய்தவர்களை காப்பாற்றும் நோக்கத்தோடு திசைதிருப்பும் நோக்கத்தோடு காசா இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

காசா இஸ்ரேல் யுத்தம் சர்வதேச ரீதியான அரசியல் பிரச்சனையை எங்கள் இலங்கை உள்நாட்டு அரசியலுக்குள் திணிப்பது ஏன்? உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட எங்களது வடுக்கள் ஆறாத நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இவரைப் போல அரசியல்வாதிகள் கடும் தீவிரமாக மதப் பிரச்சனையை கொண்டுவரக் கூடிய செயற்பாடாக இருக்கின்றது.

இவ்வாறு இவர்களது நடவடிக்கையை பார்க்கும் போது பயமாக இருக்கின்றது தற்போது சூப்பர் முஸ்லீம் அமைப்பு ஆரம்பித்துள்ளது இந்த அமைப்பும் ஸாரான் போன்ற அடிப்படை வாத சிந்தனை போன்றவர்களா? இவர்களும் ஸாரான் குழுவைப் போன்று பாரிய  குண்டுவெடிப்புகளை செய்வார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சிங்கள முஸ்லீம் இனங்களுக்கிடையே மீண்டும் ஒரு பாரிய மதரீதியான பிரிவினையை ஏற்படுத்த போகின்றார்களா? கடந்த 30 வருடத்திற்கு முன்னர் இஸ்லாமிய இளைஞர்களும்  விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்து ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் புலிகளில் இருந்து வெளியேறிய இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை

இவ்வாறு புலிகள் அமைப்பில் ஆயுத பயிற்சி எடுத்துவிட்டு வெளியேறிய அவர்களை புனர்வாழ்வு அளிக்கப்பட்டு பாதுகாத்த அந்த நேர அரசியல் தலைவர்கள் யார்? அவர்கள் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதா? அவர்கள் கடைசியாக ஸாரான் என்ற வடிவிலே 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 வெளிப்படையாக செயற்பட்டு ஒரு மதரீதியாக தற்கொலை குண்டுதாக்குதலை செய்து பாரிய படுகொலை செய்த அமைப்பு என பெருமையை எடுத்த அமைப்பு இஸ்லாமிய மதத்தில் இருந்து வந்த ஸாரான் என்பதை மறந்து விடக்கூடாது

எனவே ஒரு சில இஸ்லாமிய அமைப்பும் சில அரசியல்வாதிகள் மதக்கலவரத்தை கொண்டு வருவதற்காக முயற்சிக்கின்றார்களா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே கடந்த காலத்தில் முஸ்லீம் மதத்தை இழிவுபடுத்தி மத கலவரத்தை ஏற்படுத்த போவதாக குற்றச்சாட்டில் ஞானசார தேரரை கைது செய்து சிறையில் அடைத்து இவ்வாறு இன மத கலவரத்தை தூண்ட கூடிய  இந்த  முஜாஹித் ரகுமான்  போன்ற அரசியல்வாதிகள் மற்றும் சுப்பர் முஸ்லீம் அமைப்பினர் கைது செய்யப்பட வேண்டும். அப்போது தான் நாட்டின் இறையான்மை, இன ஒற்றுமை, நல்லிணக்கத்தையும் பாதுகாக்க முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *