ஆனையிறவில் தயாரிக்கப்படும் உப்புக்கு ‘றஜலுனு’ என்ற வர்த்தக நாமம் சூட்டப்பட்டிருப்பது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
யானைகள் தாவர உண்ணிகள் என்பதால் அவற்றின் உடலில் உப்புச்சத்துப் பற்றாக்குறைவு ஏற்படும்போது அவை உப்பைத்தேடிச்சென்று உண்பது வழமை.
ஆனையிறவுக் கடல் நீரேரிகளின் கரைகளில் உப்பு விளைவதை அவதானித்த ஆங்கிலேயர்கள் 1938 இல் ஆனையிறவு உப்பளத்தை அமைத்தனர்.
இங்கு விளையும் உப்பை மூலப்பொருளாகக் கொண்டு1954 இல் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை உருவானது.
ஆனையிறவுப் பாதையால் பயணிப்பது என்பது மரணத்தின் குகையினூடாகச் செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ் மக்கள் நடுங்கும் அளவுக்கு பின்னாளில் இங்கு அமைந்திருந்த சோதனைச் சாவடிகள் திகிலூட்டுவனவாக அமைந்திருந்தன.
இவற்றையெல்லாம் புறந்தள்ளி மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக றஜலுனு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உப்பில்லாப் பண்டம் மட்டுமல்ல அது றஜலுனு உப்பாக இருந்தால் தமிழ் மக்களின் மனோவுணர்வில் அதுவும் குப்பையில்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.