புனித ரமழான் மாதத்தின் நிறைவை குறிக்கும் நோன்புப் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் வடக்கு மாகாண மக்களுக்கும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரமழான் மாதம் முழுவதும் நீங்கள் கடைப்பிடித்த நோன்பும், பக்தியும், இரக்கமும் இத்தகைய நேரம் பகிர்ந்தளிக்கவும், ஆதரவளிக்கவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைகிறது.
இந்தப் புனித நாளில் “உங்கள் குடும்பங்களுக்கு துன்பங்கள் நீங்கி, வாழ்வில் செழிப்பு, அமைதி, மகிழ்ச்சி நிலைக்க” இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டார்.