கிழக்கு தமிழர் கூட்டணியின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழா கிரான் றெஜி மண்டபத்தில் இன்று (27) வியாழக்கிழமை இடம்பெற்றது.
“முதலில் தோற்கடிக்க வேண்டியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு” என முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் வி.முரளீதரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் கூட்டமைப்பை உருவாக்கியது உலகம் முழுக்க பேசும் பொருளாக பார்க்கப்படுகின்றது
அண்மையில் பிரித்தானியா அரசாங்கம் கருணா அம்மானாகிய எனக்கு தடைவிதித்தது “நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா? இவ்வளவு நாளும் இல்லாத தடை” கூட்டு சேர்ந்து தடைவிதிக்கின்றனர்.
அதாவது “எல்லா நாம்பன் மாடும் வாலை கிளப்பி ஓடுதென்று பசுவும் வாலை கிளப்பி ஓடியது” என்ற பழமொழி போல நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் வாலை கிளப்புகின்றார் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது நான்தான் அந்த காலத்தில் அவர் எங்கிருந்தார் என்று தெரியாது ஆகவே நாங்கள் வெல்லப் போவது உறுதி என்றார்.