மாநகர சபை அதிகாரங்களைக் கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட திருமலை பிரதான தாண்டவன்வெளி வீதிகளில் இரவு வேளையில் நடமாடித்திரிந்த 05 கட்டாக்காலி மாடுகள் (25) இரவு பிடிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வீதியில் மாலை நேரம், இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகள் கூட்டமாக அலைந்து திரிகின்றது இதனால் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமாக அமைகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய தண்டப்பணத்தினை செலுத்த வேண்டும்.
இல்லை எனின் 10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.