கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அலுவலகத்திற்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (27) திகதி விஜயம் மேற்கொண்டு மீனவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன் போதுஅமைச்சர் மீனவர்களின் குறை நிறைகள், மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக கேட்டறிந்தார்.
தொடர்ந்து குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வினை மிக விரைவாக பெற்றுத் தருவதாகவும், சட்டவிரோத மீன்பிடியை தடுத்து கடல் வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பேரிலேயே அமைச்சர் விஜயம் மேற்கொண்டு மீனவர்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
ஆற்றினை ஆளப்படுத்துதல், களப்பு இறங்குதுறை அமைத்தல், புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக மீன் பிடி வசதிகளை ஏற்படுத்தவும், சட்டவிரோத மீன்பிடி வலைகளை தடுக்கவும் ஆள் கடல் மீன் பிடி தொடர்பாகவும் இதன் போது மீனவர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீர் வள உதவி பணிப்பாளர் றுக்சான் குரூஸ், கடற் தொழிலாளர்கள், மீனவர் சங்கத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.