பிரித்தானியாவின் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவிடம் பிரித்தானியா பலமுறை எடுத்துரைத்தது.
மஹிந்த ராஜபக்ஷ மேற்குலக நாடுகளின் அறிவுறுத்தலுக்கு அடிபணியாமல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதன் பின்னரே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஊடாக பிரித்தானியா இலங்கைக்கு எதிராக பல தீர்மானங்களை கொண்டு வந்தது.
இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டும் என்றார்.