2025ம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச செயலக உதைபந்தாட்ட போட்டியில் வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது. கரைச்சி பிரதேச செயலக விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான 2025ம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட தொடர் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய நிலையில் இன்றைய தினம் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் ஆனந்தபுரம் ஸ்ரார் ஈகில் விளையாட்டுக்கழகமும் வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகமும் மோதியிருந்தன. 90நிமிடங்கள் கொண்ட விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப்பெற தண்டஉதை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகம் 4 ற்கு 3என்ற கணக்கில் ஸ்ரார் ஈகில் விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி சம்பியனாகியது.
பரிசளிப்பு நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் , மாவட்ட உதை பந்தாட்ட சம்மேளன தலைவர் மற்றும் செயலாளர், முட்கொம்பன் மகா வித்தியாலய முதல்வர், மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க தலைவர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராமசேவையாளர் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
