மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம் பராமரித்து வந்த அம்மன் பீடம் உள்ள காணியில் சட்டவிரோதமாக தனிநபர் ஒருவர் அமைத்த மீன்வாடியை அகற்றுமாறு மாவட்ட அபிவிருத்தி குழு கூடத்தில் தீர்மானிக்கப்பட்டதை விடையத்தை உண்மைக்கு புறம்பாக செய்தியை வெளியிட்ட சக்தி தொலைக்காட்சியை வன்மையாக கண்டிக்கின்றோம் என ஆலைய பரிபாலன சபையின் தலைவர் ஞா.ஜமேகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெ◌ாய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டிக்கழி கடற்கரையில் ஆலைய உற்சவகாலங்களில் புனித மஞ்சல் நீராடுதலும் கும்பஞ் சொரிதல் போன்ற புனித காரியங்களுக்காக வேல் நாட்டப்பட்டு அம்மன் பீடம் அமைக்கப்படட்டு காலம் காலமாக இந்து மக்கள் அந்த காணியை பராமரித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த காணியை கடந்த வருடம் மாநகரசபை ஆணையாளராக இருந்த ஆணையாளர் அது தமது மாநகரசபை காணி என தனிநபர் ஒருவருக்கு மாநகர சபை சட்ட விதிகளை மீறி சட்டவிரோதமாக மீன்வாடி அமைக்க தனி நபர் ஒருவருக்கு வழங்கியதையடுத்து அங்கு குறித்த நபர் சட்டவிரோதம◌ாக அம்மன் பீடப்பகுதியில் மீன்வாடி அமைத்து இந்து மக்களை இழுவுபடுத்தும் செயலினை செய்துள்ளார்
இது தொடர்பாக ஆலைய பரிபாலனசபை பொதுமக்கள் சம்மந்த பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுவந்த நிலையில் அரசாங்க அதிபரிடம் சென்று முறையிட்டபோது அவர் குறித்த நபர் தமது புதிய கச்சேரிக்கு முன்னால் அரச காணியை அபகரித்து சட்டவிரோதமாக வீடு கட்டியுள்ளார் எனவும் அவரை உடன் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து அரசாங்க அதிபர் அளித்த உறுதி மொழியை நிறைவேற்ற◌ாத நிலையில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்த விடையம் தொடர்பாக ஆராயப்பட்டு உடனடியாக அந்த மீன்வாடியை அகற்றுமாறு தீர்மானிக்கப்பட்டதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிடமும் அதனை அகற்றுமாறு தீர்ப்பு வழங்கிய நிலையில் பிரதேச செயலாள் குறித்த காணியில் மீன்வாடியை அமைத்துள்ள நபரை எதிர்வரும் 28 க்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு நோட்டீஸ் ஒட்டின◌ார்
இவ்வாறான நிலையில் சத்தி தொலைக்காட்சி கடந்த 21ம் திகதி இந்த மீன்வாடி தொடர்பாக உண்மையை ஆராயாமல் ஒருபக்க சார்பாக உண்மைக்கு புறம்பாக செய்தியை வெளியிட்டுள்ளதை வன்மையாக ஆலைய பரிபாலனசபை கண்டிக்கின்றது
இதேவேளை குறித்த காணி தொடர்பாக பல அதிகாரிகள் எமது பிரதேசத்தை சேராத விளையாட்டு கழகங்கள் சங்கங்கள் இந்த காணி தொடர்பாக உண்மைக்கு புறம்பாக மோசடியாக கடிதங்களை தனியாருக்கு வழங்கியுள்ளனர்
எனவே இது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளோம் எனவே ஒரு ஆலைத்தின் காணியை அபகரித்து அங்கு இருக்கும் அம்மன் பீடத்தின் முன்னாள் மீன் வாடியை அமைத்து இந்து மதத்தை இழுவுபடுத்தி வரும் இந்த செயற்பாட்டை கண்டித்து எதிர்வரும் காலங்களில் இந்து அமைப்புக்கள் பொதுமக்கள் ஒன்றினைந்து கச்சேரிக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்பதுடன் பிரதேச செயலாளர் மேற் கொண்டுவரும் நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரவு என்றார்.