தியாக தீபம் அன்னை பூபதியின் 37 வது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி இன்று சனிக்கிழமை (19) மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் அன்னையின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி உணர்வு பூர்வமாக அனுஷ்டித்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி வவுணதீவு பிரதேச சபை வேட்பாளர் செல்வகுமார் தலைமையில் ஆயித்தியமலை பிரதேசத்திலுள்ள பிரத்தியோகமான இடத்தில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மாவட்ட அமைப்பாளர் குகநாதன், வெள்ளாவெளி பிரதேச அமைப்பாளர் குமாரசிங்கம் மற்றும் வவுணதீவு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.