சிறந்த இலக்கியவாதிக்கான தமிழ் நாடு ஆளுநர் விருது பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆன்மீக சொற்பொழிவாளரும், இலக்கியவாதியுமான செந்தமிழ் சொல்லருவி சந்திர மௌலீசன் லலீசன் அவர்களுக்கு சந்நிதியான் ஆச்சிமத்தால் இன்றைய தினம் கௌரவிக்கப்பட்டார்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெறும் நிகழ்வில் இடம் பெற்றது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது.
பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் தொடர்ந்து மகாபாரதம் தொடர் சொற்பொழிவினை சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் நிகழ்த்தியதை தொடர்ந்தே தமிழ் நாடு ஆளுநர் விருதுபெற்ற கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் செந்தமிழ் சொல்லருவி சந்திர மௌலீசன் லலீசன் கௌரவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து கெருடாவில் தெற்கு தொண்டைமானாற்றை சேர்ந்த இளந்துளிர் அமையத்தின் கோரிக்கைக்கு அமைவாக சித்திரை வருட நிகழ்வுக்காக முப்பதாயிரம் ரூபா நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.