மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பரை நேற்று வெள்ளிக்கிழமை (18) காலையில் சிஜடி யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த (2006.12. 15) ம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் கடந்த எட்டாம் திகதி பிள்ளையான் அவரது காரியாலயத்தில் வைத்து சிஜடி யினர் கைது செய்தனர்.
அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையையடுத்து கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தலுடன் தொடர்புபட்ட பிள்ளையானின் சாரதியான ஜெயந்தனை கொழும்பில் இருந்து வந்த சிஜடி யினர் அவரை அவரது வாழைச்சேனை வீட்டில் வைத்து கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.