வெற்றி நமதே ஊர் நமதே என்னும் கொள்கை திட்டத்திற்கு அமைவாக உள்ளூராட்சி தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் முகமாக தேர்தல் அலுவலகங்கள் திறப்பு விழா நிகழ்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புளியந்தீவு வட்டார தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று மாலை அவ் வட்டாரத்தின் வேட்பாளர் முத்துலிங்கம் துதிஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டு இந்த தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழா நிகழ்வின் போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் மட்டு மாநகர சபையின் கட்சி வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.